இலங்கை மீது அழுத்தம் தமிழ் நாட்டில் 10,00,000 கையெழுத்து வேட்டை

போர்க்குற்றம் தொடர்பாக இல ங்கை அரசுமீது சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணை நடத்துவதற்கு ஐ. நா. சபை வலியுறுத்த வேண்டும் என்று நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமர் ருத்ரகுமார் வலியுறுத்தியுள்ளார். அமெரிக்காவில் இருந்து இணையதள வழி கானொளி காட்சி மூலமாக சென்னையில் செய்தியாளர் களை சந்தித்த அவர் ஐ. நா. சபைக்கு அழுத்தம் கொடுக்கும் விதமாக கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது என்றார். சென்னையில் நடைபெற்ற கையெழுத்து இயக்க தொடக்க விழாவில், தமிழக வாழ்வு ரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன், தீராவிடர் விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த கொளத்தூர் மணி உள்ளிட்டோர் கலந்து கொண்டு கையெழுத்திட்டு ஆரம்பித்து வைத்தனர்.

இந்த கையெழுத்து இயக்கத்திற்கு தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புக்கள் ஆதரவு தெரிவிக்கும் என்று வேல்முருகன் தெரிவித்தார். தமிழகத்தில் மட்டும் 10 இலட்சம் பேரிடம் கையெழுத்துப் பெற நாடு கடந்த தமிப்ழ அரசு திட்டமிட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply