சிறுபான்மை, சிறு கட்சிகளின் நிலைப்பாடு நாளை : மனோ
சிறு கட்சிகளின் பேரவை, கொழும்பில் நாளை வெள்ளிக்கிழமை (08) கூடி தேர்தல் முறை மாற்றத்தை கோரும் அரசியலமைப்பின் 20ஆம் திருத்தம் தொடர்பான தமது நிலைப்பாட்டை எடுக்கவுள்ளதாக என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவரும், தேசிய நிறைவேற்று சபை உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார். இது தொடர்பில் மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது, ஜனாதிபதியால் கடந்த 29ஆம் திகதி அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட அரசியலமைப்பின் 20ஆம் திருத்த யோசனைகள், சிறு கட்சி தலைவர்களால் பரிசீலிக்கப்பட்டு இறுதி முடிவு எடுக்கப்படும்.
சிறு கட்சிகளின் நடவடிக்கை குழு ஏற்கெனவே பலமுறை கூடி இந்த விவகாரம் தொடர்பான கொள்கை ஆவணம் ஒன்றை தயாரித்துள்ளது. அலரி மாளிகையில் நேற்று நடைபெற்ற பிரதமருடனான சந்திப்பிலும், தேர்தல் ஆணையாளருடன் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற சந்திப்பிலும் இவை தொடர்பாக ஆராயப்பட்டன. இந்நிலையில், அனைத்து சிறுபான்மை மற்றும் சிறு கட்சிகளின் பிரதிநிதிகள், பத்தரமுல்லை வோடர்ஸ் எட்ஜ் விடுதியில் நாளை வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு கூடி, நடவடிக்கை குழு தயாரித்துள்ள ஆவணத்தை ஆராய்ந்து முடிவு எடுக்க உள்ளனர். இக்கூட்டம் தொடர்பான அழைப்புகள் அனைத்து சிறு கட்சிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply