ஐ.தே.க அரசை அமைக்க நாடே அணி திரண்டுள்ளது : விவிஜேதாச ராஜபக்ஷ

ஐக்கிய தேசியக் கட்சிஅரசை உருவாக்க நாடே அணி திரண்டுள்ளதால் இத்தருணத்தில் பாராளுமன்றத்தைக் கலைக்க வேண்டும் என்ற நிலைப் பாட்டிலேயே ஐ. தே. கவும் செயற்பட்டு வருவதாக நிதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்தார். 20ஆவது அரசியலமைப்பு சீர்திருத்த த்தை நிறைவேற்ற எவ்வாறாயினும் தற்போதைய பாராளுமன்றத்தில் இடம் இல்லையென்பது தெரிகிறது. அதனை நிறைவேற்றுவதானால் ஐ. தே. கவின் ஆதரவும் பெற்றுத் தரப்படும்.

அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை முன்னெடுக்கும் தேவையில்லை என்றும் அமைச்சர் கூறினார்.

சிறிகொத்தா ஐ. தே. கட்சித் தலை மையகத்தில் நடைபெற்ற ஊடக வியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.

ஐ. தே. க.வின் தேர்தல் பொறிமுறை ஊடாகவே மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியானார். அதற்கு பல குழுக்கள் இணைந் தன. தற்போது பிரதமருக்கு எதிரான நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இவ்விடயமாக மக்களைத் தவறான பாதையில் இடும் பல செய்திகள் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் ஊடாக வெளிவந்தன.

தான் ஜனாதிபதியானால் ரணிலைப் பிரதமராக்குவேன் என்ற மைத்திரிபால சிரிசேனவின் வாக்குறுதியை மக்கள் ஏற்றுக்கொண்டனர்.

நாம் வாழ்க்கைச் செலவைக் குறைத்தோம். சாட்சியங்களைப் பாதுகாக்கும் சட்டம் மருந்துப் பொருட்கள் சட்டம் ஆகியவற்றை நிறைவேற்றினோம்.

100 நாள் வேலைத்திட்டத்தையும் அமுல்படுத்தினோம்.

ஆட்சியை தொடர்ந்தும் கொண்டு செல்ல எமக்குத் தேவையில்லை பிரதமருக்கும் தேவையில்லை. அரச தரப்பினருக்கு தேவையில்லை,

பாராளுமன்றத்தை கலைத்து புதிய பாராளுமன்றத்தை மக்கள் தெரியும் உரிமை உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

பாராளுமன்ற உறுப்பினர்களின் வரப்பிரசாதங்களை பலப்படுத்தி குடு, எதனோல் வர்த்தகர்கள்,. அரச நிதியை சேதமாக்கியோர், வெளிநாடுகளில் வீடுகளை வாங்கியோரை எல்லாம் மக்கள் பார்த்துக் கொண்டிருக் கின்றனர்.

மஹிந்த ராஜபக்ஷவுடன் இருக்கும் சிறிய குழுவின் 19வது திருத்தத்தை தோற்கடிக்கவும் பல உபாய மார்க் கங்களை மேற்கொண்டனர்.

இது நிறைவேறிவிட்டது. அவர்கள், இனவாத, மதவாத விடயங்களைப் பரப்புகின்றனர். தேசாபிமானிகள் என அட்டைகளை மாட்டிக் கொண்டு ள்ளனர்.

பிரபாகரன் நாட்டில் ஓர் அரசை அமைத்தார். அங்கு அமைச்சராக ஜீ. எல் பீரிஸ் இருப்பார் என நான் உறுதியாகக் கூறுகிறேன். மைத்திரிபால சிரிசேன அமைச்சர் பதவி வழங்காமையே அவருக்குள்ள பிரச்சினையாகும்.

மஹிந்த ராஜபக்ஷவும் ஜீ. எல். பீரிஸ¤ம் தேசாபிமானத்தை காட்டி யாழ்ப்பாண சம்பவத்தை முன்வைத்து நாட்டை மீண்டும் தீமூட்டப் பார்க் கின்றனர்.

விகாரைகளுக்குச் சென்று பிரச்சினைகளை உருவாக்குகின்றனர்.

ஜீ. எல். பீரிஸினை பகிரங்கத் தொலைக்காட்சி விவாதத்துக்கு வருமாறு அழைக்கிறேன்.

ஒரு நம்பிக்கையில்லாப் பிரேரணை அல்ல நூறு நம்பிக்கையில்லாப் பிரேரணைகளை கொண்டுவாருங்கள் அரசு சிறு தொகையினராக இருந்தாலும் நாமே தீர்ப்பு எடுக்கிறோம்.

அரசுக்கு அடித்தாலும் பரவாயில்லை மக்கள் அபிப்பிராயத்துக்கு தாக்குதல் நடத்த வேண்டாம்.

தினேஷ் குணவர்த்தனவின் அறிக்கை குழு அறிக்கை அல்ல. இருபதை பெரும்கட்சிகள் சேர்ந்து அவசரமாக நிறைவேற்ற இயலும்.

இது பற்றி ஆழமாகச்சிந்தித்துப் பார்க்க வேவண்டும்.

வாக்களிப்பு முறை இலகுவாக வேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply