ஏன் ஒபாமா காலை 11 மணிக்கு பீர் குடித்தார்?

உலகின் சில பகுதிகளை தவிர பெரும்பாலன இடங்களில் காலை 11 மணிக்கு பீர் குடிப்பது என்பது கொஞ்சம் வித்தியாசமாகவே பார்க்கப்படும். ஆனால் அதுவே அமெரிக்க அதிபர் என்றால்? ஜெர்மனில் நடைபெற்ற ஜி 7 மாநாட்டில் கலந்துகொள்ள சென்ற அமெரிக்க அதிபர் ஒபாமா காலை 11 மணிக்குகெல்லாம் பியர் குடித்தது பலரையும் ஆச்சிரியப்படவைத்துள்ளது. ஆனால் மாநாடு நடந்த பவேரியாவில் காலை நேரத்தில் அப்பகுதியில் புகழ் பெற்ற வேய்சிபைர் எனப்படும் பியரை குடித்துவிட்டு வேலைக்கு செல்வது மிகவும் சாதாரண விஷயம். அதுவும் ஞாயிற்று கிழமை என்றால் கேட்கவே தேவையில்லை. அந்த பகுதியின் பாரம்பரிய வழக்கப்படி உணவுடன் காலை நேரத்தில் நண்பர்கள், உறவினர்களுடன் பியர் அருந்துவது நிண்ட காலமாக கடைபிக்கப்படுவரும் நடைமுறைதான்.

அந்த வகையில் தான் ஒபாமாவும் ஜெர்மனின் அதிபர் ஆங்கெலா மெர்க்கெல் அளித்த விருந்தில் அரை லீட்டர் பியர் குடித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply