ஏமனில் ஐக்கிய நாடுகள் சபை கொண்டுவந்த போர்நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்ததால் மீண்டும் போர் தொடங்கியது

ஏமனில் ஐக்கிய நாடுகள் சபை கொண்டுவந்த போர்நிறுத்த ஒப்பந்தம் சிலமணி நேரங்களில் முடிவுக்கு வந்ததால் மீண்டும் போர் தொடங்கியது. ஏமனில் ஷியா பிரிவின் ஹவுதி அமைப்பினர் அரசை எதிர்த்து போரிட்டு வரும் நிலையில் அவர்களால், தங்கள் நாட்டுக்கு பாதிப்பு ஏற்படலாம் என்பதால், கூட்டணிப்படையின் ஆதரவுடன் சவுதி நாட்டுப்படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன.

இதில் அப்பாவி பொதுமக்கள் ஏராளமானோர் பலியானதையடுத்து அங்கு போர்நிறுத்தம் ஏற்படுத்த ஐக்கிய நாடுகள் சபை நடவடிக்கை மேற்கொண்டது. இதையடுத்து போர்நிறுத்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தது.

ஆனால் சில மணிநேரங்களில் இருதரப்பினரும் போர் நிறுத்தத்தை மீறி தாக்குதல் நடத்த தொடங்கினர். சவுதி அரேபிய படைகள் வான்வழித் தாக்குதலை தலைநகர் சனா பகுதியில் மீண்டும் தொடங்கியது. இதேபோல் தரைவழித்தாக்குதலும் தொடங்கி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply