நல்லாட்சி தொடர்பான கனவுகள் நொருங்கிப் போய்விட்டது! : கலாநிதி நிர்மால் ரஞ்சித் 

nirmal_ranjith_001நல்லாட்சி தொடர்பான கனவுகளுடன் அதிகாரம் கையளிக்கப்பட்டுள்ள அரசின் செயல்பாடுகள் காரணமாக பொதுமக்களின் எதிர்பார்ப்புகள் நொருங்கிப் போயுள்ளதாக கலாநிதி நிர்மால் ரஞ்சித் தேவசிறி தெரிவித்துள்ளார். திவயின பத்திரிகையின் ஞாயிறு வார இதழுக்கு புரவெசி பலய அமைப்பின் முக்கியஸ்தர் கலாநிதி நிர்மால் ரஞ்சித் தேவசிறி அளித்துள்ள நேர்காணலில் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள கலாநிதி நிர்மால் ரஞ்சித், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கிராமியப் புறங்களில் பெற்றிருந்த செல்வாக்கைப் பார்த்து அவரை ஒருபோதும் தோற்கடிக்க முடியாது என்று ஆரம்பத்தில் நாங்கள் நினைத்திருந்தோம்.

 

எனினும் பொதுமக்களின் மீதான அடக்குமுறை காரணமாக மஹிந்த அரசாங்கம் வீட்டுக்கு அனுப்பப்பட்டது.

 

அதன் மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றிய இந்த அரசாங்கமும் பொதுமக்களின் எதிர்பார்ப்புகளை நொருங்கிப் போகச் செய்துள்ளது.

 

நல்லாட்சி என்ற எதிர்பார்ப்பின் அடிப்படையே இந்த அரசின் செயற்பாடுகள் மூலம் தகர்க்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது என்றும் கலாநிதி நிர்மால் ரஞ்சித் தேவசிறி தொடர்ந்தும் கவலை தெரிவித்துள்ளார்.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply