எட்டாவது மாடியில் இருந்து தவறி விழுந்து பிரபல இந்திய தொழிலதிபரின் மகன் மரணம்

suwarajவெளிநாட்டில் வசிக்கும் இந்தியராக லண்டனில் வாழ்ந்துவரும் பிரபல தொழிலதிபர் சுவராஜ் பால் இன் மகனான அங்கட் பால்(45) லண்டனில் உள்ள தனது வீட்டின் எட்டாவது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தார்.பிரிட்டைனின் உயரிய பட்டமான ‘லார்ட்’ பட்டம் பெற்றவரான சுவராஜ் பால், கப்பாரோ குரூப் என்ற பெயரில் இரும்பு பைப்கள், கார் உதிரிபாகங்கள், உணவகங்கள் மற்றும் தங்கும் விடுதிகளை நடத்தும் பிரபலமான தொழிலதிபராக உள்ளார். ஆண்டுக்கு சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு பணம் புரளும் இவரது 40-க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் சுமார் 10 ஆயிரம் பேர் பணியாற்றி வருகின்றனர்.

சினிமா மற்றும் டிசைனிங் தொழிலிலும் ஈடுபட்டு வரும் கப்பாரோ குரூப் நிறுவனம் அதிவேக கார்களை தயாரிக்கும் முயற்சியிலும் வெற்றி பெற்றுள்ளது. மேற்படி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக சுவராஜ் பாலின் மகனான இருந்த அங்காட் பால் பதவி வகித்து வந்தார்.

இந்நிலையில், மத்திய லண்டனில் உள்ள தனது வீட்டின் எட்டாவது மாடியில் இருந்து அங்காட் பால் தவறி விழுந்ததாக அவசர உதவி மையத்துக்கு தகவல் வந்தது.

விரைந்துவந்த மருத்துவக் குழுவினர் பலத்த தலைக்காயங்களினால் அவரது உயிர் பிரிந்து விட்டதாக தெரிவித்தனர். இதுதொடர்பாக, வழக்குப்பதிவு செய்துள்ள லண்டன் போலீசார், மரணத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply