குருநாகல் மற்றும் பாதுக்கையில் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் இருவர் கைது

நாட்டின் இருவேறு பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட சோதனைகளின் போது, ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் இரண்டு சந்தேகநபர்களைக் கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். குருநாகல், தித்தவெல்ல எலஸ்வத்தை பகுதியில் 126 கிராம் 500 மில்லி கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குருநாகல் பொலிஸ் நிலைய அதிகாரிகளினால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் மாஸ்பொத்த பகுதியைச் சேர்ந்த 35 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இதேவேளை, பாதுக்கை உடுமுல்ல சந்தியில் 14 கிராம் 420 மில்லி கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் மற்றொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடமிருந்து போதைப்பொருள் வியாபாரம் மூலம் ஈட்டப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 325,000 ரூபா பணமும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

ஹோமாகம கோட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போது, பாதுக்கையைச் சேர்ந்த 37 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவங்கள் குறித்து குருநாகல் மற்றும் பாதுக்கை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply