தீபாவளியின் ஒளிப்பிரவாகத்தில் மானிடரின் துயரங்கள் மறையட்டும் : மைத்திரிபால சிறிசேன

maithiriதீபாவளியின் தீபவொளி மனித மனங்களில் ஒளிவீசுவதால் இன ஐக்கியத்துடன் கூடிய நல்லிணக்கம் பிரகாசிப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீபாவளி வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளதாவது, உலகெங்கிலும் வாழும் இந்துக்களால் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் தீபாவளித்திருநாள் உலகிலிருந்து தீயசெயல்களைப் போக்கி நற்செயல்களை நிலைநாட்டுவதை அடிப்படையாகக் கொண்டுள்ளமையால் ஏனைய உலக மக்களுக்கும் இத்திருநாள் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நாளாகக் காணப்படுகிறது.

 

உலகை சிறந்ததோர் இடமாக மாற்றுவதற்கு மனித நாகரிகத்தின் ஆரம்பகால யுகங்களிலும் மனிதனால் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன என்ற உண்மை தற்போதைய தீபாவளிக் கொண்டாட்டங்களிலிருந்து நாம் அறிந்துகொள்ளக் கூடியதாயுள்ளது.

 

ஒளிவிளக்குகளை ஏற்றுவதன் மூலம் உருவாகும் ஒளியானது இருளை அகற்றுகிறது. இதே போன்று தீபாவளியின் தீபவொளி அனைத்து மனித மனங்களிலும் ஒளிவீசுவதால் அவர்களுக்குள் எரிந்து கொண்டிருக்கும் ஐக்கியத்துடன் கூடிய நல்லிணக்கம் உலகின் அனைத்து நாகரிகங்களுக்கும் உரித்தான மனிதர்களின் பொதுவான பிரார்த்தனையாக மாற்றமடைகின்றது.

 

அது பேதங்கள் எதுவுமற்ற ஐக்கிய அரசாட்சிசெலுத்தும் இவ்வுலகின் இருப்புக்குத் தேவையான அடிப்படை நிபந்தனை என்பதை மிகவும் பிரகாசமான விளக்கொளி பூஜையின் மூலம் எமக்கு வலியுறுத்துகிறது.

 

இவ்வாறான நற் செயல்களை நோக்க மாகக் கொண்ட பொதுவான பழக்கவழக் கங்களினூடாகவே மானிடப் பரிணாம வளர்ச்சியானது பயனுறுதி வாய்ந்ததாக இன்றுவரை வியாபித்துள்ளது. இவ்வாறு அனைத்து காலங்களுக்கும் பொருந்துகின்ற, தீபாவளி போன்ற விழாக்கள் ஆன்மீக வழிபாட்டுப்பழக்க வழக்கங்களின் மூலம் தூய்மைப்படுத்தப்படுவதன் காரணமாக அதன் உன்னத குணவியல்புகள் எதிர்காலத்திலும் நிலைத்திருத்தல் இன்றியமையாததாகும்.

 

இலங்கையில் வாழும் சகல இந்துக்களுக்கும் “இதயபூர்வமான பக்திப் பெருமித தீபவொளி வீசும் தீபாவளிப் பண்டிகை” மலரட்டும் என பிரார்த்திக்கின்றேன்.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply