விடுதலைப் புலிகளின் கொடிகளை ஏற்றுவதற்கு எவருக்கும் அனுமதிக்கக் கூடாது : மஹிந்த

நாட்டின் வடக்கு கிழக்கு பகுதிகளில் விடுதலைப் புலிகளின் கொடிகளை ஏற்றுவதற்கு எவருக்கும் அனுமதியளிக்கக் கூடாது mahindaஎன முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ பொலிஸாரை வலியுத்தியுள்ளார். “மாவீரர் வாரம்“ அனுஷ்டிக்கப்படுவதாலேயே தான் இந்த விடயத்தை வலியுறுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தனது அரசாங்கம் புலிகளை நினைவுகூர்வதற்கோ, அவர்களது கொடிகளை ஏற்றுவதற்கோ எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அனுமதித்தது இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

எனினும் ஒருசில அமைப்புகள் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரனின் பிறந்த தினம் மற்றும் புலி உறுப்பினர்களின் நினைவு நாளை அனுஷ்டிக்க தயாராகி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தெற்கில் சிலர் இந்த வாரத்தின் முக்கியத்துவத்தை மறந்துள்ளதாகவும், எனினும் கொடிகளை ஏற்றுவதற்கு அனுமதிப்பதன் மூலம் நாம் புலிகளுக்கு முன்னாள் முழந்தாலிட வேண்டிய நிலை ஏற்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாவீரர் தினத்திற்கு முன்னதாகவே சில புலி உறுப்பினர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

சில அமைப்புகள் மற்றும் தனிநபர்களுக்கு எதிரான தடை நீக்கப்பட்டுள்ளதாகவும், எனினும் தடை தொடரும் அமைப்புகள் மற்றும் தனிநபர்களின் நோக்கம் தனிநாட்டை உருவாக்குவதே எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply