அமெரிக்க அதிபர் வேட்பாளராகிறார் டொனால்டு டிரம்ப்

diramஅமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் 8-ந்தேதி நடைபெற உள்ளது. இதில், போட்டியிடும் குடியரசுக்கட்சி மற்றும் ஜனநாயக கட்சி வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல்கள் நடைபெற்று வருகிறது.  ஜனநாயக கட்சியின் அதிகாரபூர்வ வேட்பாளராவதற்கு 2,383 பிரதிநிதிகளின் வாக்குகளும், குடியரசுக் கட்சியின் அதிகாரபூர்வ வேட்பாளராவதற்கு 1,237 வாக்குகளும் பெற்றிருக்க வேண்டும். ஜனநாயக கட்சியில் ஹிலாரி கிளிண்டனும், குடியரசுக் கட்சியில் டொனால்டு டிரம்பும் அதிக வாக்குகளை பெற்று முன்னிலையில் இருந்து வந்தனர். 

 

இந்நிலையில், குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக போட்டியிட முயற்சித்து வரும் டொனால்டு டிரம்ப் 1,238 வாக்குகளை பெற்று வெற்றியை கைப்பற்றியுள்ளார். அதிகாரபூர்வமாக வேட்பாளராவதற்கு தேவைப்படும் 1,237 வாக்குகளை கடந்து விட்டதால் டொனால்டு டிரம்ப் குடியரசுக் கட்சியின் அமெரிக்க அதிபர் வேட்பாளராவது உறுதியாகியுள்ளது.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply