பிரேசிலில் இளம் பெண்ணை 30 நண்பர்களுடன் சேர்ந்து கற்பழித்த காதலன்
பிரேசில் நாட்டில் ரியோ டி ஜெனிரோ நகரை சேர்ந்தவர் அந்த இளம்பெண். அவர் அங்குள்ள தனது காதலர் வீட்டுக்கு கடந்த சனிக்கிழமை சென்றார். அங்கு அவரை அவரது காதலரும், மேலும் 30 பேரும் கும்பலாக சேர்ந்து கற்பழித்து சின்னாபின்னப்படுத்தினர். அந்தப் பெண்ணுக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து தந்து இந்த குற்றத்தை அவர்கள் புரிந்துள்ளதாக தெரிகிறது.
மறுநாள் காலையில் அந்தப் பெண் மயக்கம் தெளிந்து கண் விழித்து பார்த்தபோது, தான் நிர்வாணக்கோலத்தில் காயங்களுடன் இருப்பதை உணர்ந்தார். வீட்டுக்கு சென்று தனக்கு நேரிட்ட கொடுமையை சொல்லி விட்டு, போலீசில் புகார் செய்தார்.
சில தினங்கள் கழிந்தபின்னர்தான், அந்தப் பெண் தன்னை தன் காதலருடன் சேர்ந்த மிருகவெறி கும்பல், சிதைத்ததை செல்போனில் படம் எடுத்து அதை ஒரு குறிப்பிட்ட சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியில் உறைந்தார். 40 வினாடிகள் ஓடக்கூடிய இந்த வீடியோவை அவரது குடும்பமும் பார்த்து கண்ணீர் விட்டு கதறியது.
அந்த வீடியோ, பிரேசில் முழுக்க கடும் அதிர்வை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்துக்கு எதிராக கடுமையான கண்டனங்கள் குவிந்தன.
அந்தப் பெண்ணின் காதலர் உள்பட 30-க்கும் மேற்பட்டவர்களுக்கு கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்துள்ளது.
பிரேசிலில் கடந்த 2014-ம் ஆண்டு மட்டும் 47 ஆயிரத்து 636 கற்பழிப்பு சம்பவங்கள் குறித்து புகார் செய்யப்பட்டிருப்பதும், பல சம்பவங்களில் புகார் செய்யப்படுவதுகூட கிடையாது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply