இந்திய விமானப்படை நடத்திய பிரமோஸ் ஏவுகணை சோதனை வெற்றி

recketஇந்தியா மற்றும் ரஷிய நாடுகளின் கூட்டு தயாரிப்பான பிரமோஸ் ஏவுகணை இந்திய ராணுவம் மற்றும் கடற்படையில் ஏற்கனவே இணைக்கப்பட்டு உள்ளது. மிக அதிக வேகத்துடன் சென்று தாக்கும் பலம் வாய்ந்த இந்த சூப்பர்சானிக் ஏவுகணையை முப்படைகளிலும் பயன்படுத்த முடியும். இந்த ஏவுகணையை விமானப்படையில் இணைப்பதற்காக அடிக்கடி விமானப்படை அதிகாரிகள் மூலம் சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது. அதன்படி ராஜஸ்தானில் உள்ள ஏவுகணை சோதனை மண்டலத்தில் இருந்து நேற்று பிரமோஸ் ஏவுகணை செலுத்தி சோதிக்கப்பட்டது.

 

அப்போது நிர்ணயிக்கப்பட்ட இலக்கை பிரமோஸ் ஏவுகணை துல்லியமாக தாக்கி அழித்தது. இதனால் விமானப்படை அதிகாரிகளும், இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன விஞ்ஞானிகளும் மகிழ்ச்சியடைந்தனர். ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக முடித்த விமானப்படை அதிகாரிகளுக்கு, பிரமோஸ் ஏரோஸ்பேஸ் நிறுவன தலைமை செயல் அதிகாரியும், மேலாண் இயக்குனருமான சுதிர் மிஸ்ரா வாழ்த்து தெரிவித்தார்.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply