கடுவலை இலங்கையின் இரண்டாவது தலைநகராக்கப்படும்
கடுவலை நகரை இலங்கையின் இரண்டாவது தலைநகரமாக அபிவிருத்தி செய்வதாக மாநகரங்கள் மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். கடுவலை நகரில் இடம்பெற்ற வைபவமொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டார். கடந்த 30 வருடங்களாக கொழும்பு நகரில் சனத்தொகை மாற்றம் ஏற்படவில்லை. ஆனால் கடுவலை மாலபை,ஹோமாகம போன்ற பகுதிகள் நகரமயமாக்கப்பட்டு வருகின்றன. கொழும்பு எமது தலைநகரமாக இருக்கும் நிலையில் இரண்டாவது தலைநகரங்களை அமைக்க திட்டமிட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply