இலங்கை – இந்தியா இடையே பாலம் கட்டும் திட்டம் இல்லை: சிறிசேனா

MAITHIRIதலைமன்னாரையும், இந்தியாவின் தனுஷ்கோடியையும் இணைக்கும் வகையில் பாலம் கட்டும் திட்டம் எதுவும் இல்லை என்று இலங்கை அதிபர் சிறிசேனா மறுத்துள்ளார். இலங்கை, இந்தியா இடையே குறிப்பாக, பாக் ஜலசந்தியில் இலங்கையின் தலைமன்னாருக்கும், இந்தியாவின் தனுஷ்கோடிக்கும் இடையே பாலம் கட்டுவதற்கான திட்டம் இருப்பதாக மத்திய அரசு தகவல் வெளியிட்டது.

இந்த நிலையில் கொழும்பு நகரில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசிய அதிபர் சிறிசேனா, இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையே பாலம் கட்டுவதற்கு இலங்கை சம்மதம் தெரிவித்து விட்டது என வெளியாகி உள்ள தகவல்கள் அடிப்படை ஆதாரம் இல்லாதவை.

தமிழ்நாட்டில் நடந்த சட்டசபை தேர்தலின்போது, சில அரசியல்வாதிகள் மேற்கொண்ட பிரசாரம்தான் இது. இதை வைத்து இங்குள்ள அரசியல்வாதிகள் பேசி வருகிறார்கள். பாலம் கட்டினால் அதை கொளுத்துவோம் என்று உதய கம்மன்பிலா கூறியதாக கேள்விப்படுகிறேன். இப்படி முட்டாள்தனமாக பேசக்கூடாது. அப்படி ஒரு பாலம் கட்டும் திட்டமே இல்லை என்றார்.

இலங்கை தொழில் அபிவிருத்தி துறை மந்திரி கபீர் காசிம் கடந்த சில தினங்களுக்கு முன்பு, ‘‘இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையே வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இலங்கைக்கும், தமிழ்நாட்டுக்கும் இடையே பாலம் அமைப்பதன் மூலம் வர்த்தகத்தை மேலும் விரிவாக்க முடியும். பாலம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகளவில் உள்ளன. இது தொடர்பான உயர்மட்ட கலந்துரையாடல்கள் இலங்கையில் தொடங்கப்பட்டுள்ளன’’ என கூறியிருந்தார்.

இது தொடர்பாக இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேயின் ஆதரவாளரும், எம்.பி.,யுமான உதய கம்மன்பிலா, கொழும்பு நகரில் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘‘மந்திரி கபீர் காசிம், இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையே பாலம் கட்டப்போகும் தகவலை வெளியிட்டிருக்கிறார். அந்தப் பாலத்தை கட்டக்கூடாது. அப்படி கட்டினால், தேசிய பாதுகாப்பு கருதி, அந்த பாலத்தை குண்டு வைத்து எரித்து அழிப்போம்’’ என கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply