விமானிகள் குடிபோதையில் இருந்தால் 1 ஆண்டு ஜெயில் – ரூ.5 லட்சம் அபராதம்
விமானிகள் குடிபோதையில் இருந்தால் 1 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.5 லட்சம் அபராதமும் விதிக்கப்படும் என்று விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.இந்திய விமானிகளில் பலர் ஏர் இந்தியா மற்றும் தனியார் ஏர்லைன்ஸ்களில் பணியாற்றுகிறார்கள். ஏர்லைன்ஸ் விதிகளின்படி விமானிகள் விமானத்தை இயக்குவதற்கு 12 மணி நேரத்திற்கு முன்னதாக மது அருந்தி இருக்க கூடாது. இதற்காக “பிரீமினைட் ஆல்கஹால்” என்ற சோதனை நடத்தப்படுகிறது.
இந்த சோதனையில் பைலட்டுகள், பாஸ்ட் ஆபிசர் ரேங்கில் உள்ள விமான ஊழியர்கள் பலர் பிடிப்பட்டு வருகிறார்கள். இவர்களுக்கு தற்போது 3 மாத சஸ்பெண்டு, 5 ஆண்டுகளுக்கு விமானங்களை ஓட்ட லைசென்ஸ் ரத்து மற்றும் சம்பளம் மற்றும் இதரபடிகள் நிறுத்தம் போன்ற தண்டனைகள் அளிக்கப்படுகிறது.
இது போன்று மதுபோதையில் இருக்கும் பைலட்டுகள், விமான ஊழியர்களுக்கு கடும் தண்டனை விதிக்க மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் முடிவு செய்து தீவிர ஆலோசனை நடத்தியது.
இதில் பைலட்டுகள், விமான ஊழியர்கள் குடிபோதையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் அவர்களுக்கு 1 ஆண்டு ஜெயில் தண்டனை அல்லது ரூ.5 லட்சம் அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டது. இந்த தகவலை சிவில் விமான போக்குவரத்து டைரக்ட் ஜெனரல் அதிகாரப் பூர்வமாக அறிவித்தார். இதன் மூலம் பைலட்டுகள் மீதான குற்றங்கள் முதல் முறையாக போலீஸ் விசாரணைக்கு உட்படுத்த வகை செய்யப்படுகிறது.
இதையடுத்து ஏர் இந்தியா மற்றும் ஜெட்ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் தங்கள் விமானிகள் மீதான புகார்களை 2 வாரத்தில் சமர்ப்பிக்குமாறு விமான போக்குவரத்து அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply