தலைவர் கிம் ஜாங் அன்னுக்கு அவமரியாதை தந்ததாக புகார்

Northeim Koreaவடகொரியாவில் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. அந்த நாட்டின் தலைவர் கிம் ஜாங் அன் கூறிய வார்த்தைகளை கேட்டு நடக்கவில்லை என்ற குற்றச்சாட்டின்கீழ் முன்னாள் விவசாய மந்திரி ஹவாங் மின் மற்றும் கல்வி அமைச்சக மூத்த அதிகாரி ரியாங் ஜின் ஆகிய இருவரும் பொது இடத்தில் வைத்து விமான எதிர்ப்பு துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டதாக ‘ஜூங் ஆங் இல்போ’ என்ற கொரிய நாளேடு செய்தி வெளியிட்டது.

இந்த செய்தி வெளியான சுவடு மறைவதற்குள், கிம் ஜாங் அன்னுக்கு அவமரியாதை தந்ததாக குற்றம் சாட்டப்பட்டு வடகொரியாவின் துணைப்பிரதமர் கிம் யாங் ஜின் கொல்லப்பட்டார் என்ற தகவலை சியோல் நகரில் தென்கொரிய ஐக்கியப்படுத்துதல் துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ஜாங் ஜூன் ஹீ நேற்று தெரிவித்தார்.

இது தொடர்பாக மற்றொரு அதிகாரி கூறும்போது, ‘‘கடந்த ஜூலை மாதம் துப்பாக்கி சுடும் வீரர்களால் அவர் சுட்டுக்கொல்லப்பட்டார்’’ என்றார்.

மேலும் அவர், ‘‘தலைவர் கிம் ஜாங் அன் கலந்து கொண்ட பாராளுமன்ற கூட்டத்தின்போது, கிம் யாங் ஜின் மோசமான நிலையில் உட்கார்ந்திருந்து, நாட்டின் தலைவருக்கு அவமரியாதை தந்ததாக குற்றம் சாட்டப்பட்டு, இது தொடர்பாக அவரிடம் விசாரணையும் நடத்தப்பட்டுள்ளது. அதில் அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபணம் ஆகி உள்ளது’’ என கூறினார். இதற்கிடையே அவர் தூங்கி விழுந்ததாக மற்றொரு தகவல் கூறுகிறது. மேலும் இரு அதிகாரிகள் இதுபோன்று அங்கு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply