விபசார அழகி என அவதூறு செய்தி: ரூ.1150 கோடி நஷ்டஈடு கேட்டு டிரம்ப் மனைவி வழக்கு

tramஅமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் டொனால்டு டிரம்பின் மனைவி மெலானியா (47). இவர் முன்னாள் மாடல் அழகி.இவர் குறித்து லண்டனில் இருந்து வெளியாகும் ஒரு பத்திரிகை செய்தி வெளியிட்டது. அதில் நியூயார்க்கில் ஒரு தனியார் நிறுவனத்தில் பகுதி நேர பாதுகாவலராக பணிபுரிந்த மெலானியா தனது கணவர் டிரம்பை சந்தித்தார். தற்போது அவர் வெள்ளை மாளிகையை குறிவைத்துள்ளார்.

டொனால்டு டிரம்பை திருமணம் செய்யும் முன்பு நியூயார்கில் மாடல் அழகி ஆக இருந்தார். அப்போது விபசார தொழில் செய்து வந்தார். 1995-ம் ஆண்டு பத்திரிகைகளுக்கு நிர்வாண போட்டோ எடுக்க போஸ் கொடுத்துள்ளார் என செய்தி வெளியிட்டது.

இதனால் அதிர்ச்சி அடைந்த மெலானியா டிரம்ப் அந்த பத்திரிகை மீது கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அதில் அந்த செய்தி 100 சதவீதம் அப்பட்டமான பொய்யானது. எனது பெயருக்கும் புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் அது பிரசுரிக்கப்பட்டுள்ளது. எனவே அப்பத்திரிகை எனக்கு ரூ.1150 கோடி நஷ்டஈடு வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெலானியா டிரம்ப் ஸ்லோவேனியாவில் பிறந்தவர். அமெரிக்காவுக்கு வந்த அவர் அங்கு 1990-ம் ஆண்டுகளில் மாடல் அழகி ஆக இருந்தார். 2005-ம் ஆண்டு டொனால்டு டிரம்பை திருமணம் செய்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply