ஈராக் தலைநகர் பாக்தாத் ஆயுதக்கிடங்கில் தீ பிடித்து ராக்கெட்டுகள் வெடித்தன: 4 பேர் உயிரிழப்பு
ஈராக்கில் பாக்தாத் நகரில் ஷியா பிரிவை சேர்ந்த பி.எம்.பி. படையினரின் ஆயுதக்கிடங்கு உள்ளது. இவர்கள் ஐ.எஸ். இயக்கத்தினரை ஒடுக்குவதற்காக தீவிரமாக சண்டை போட்டு வருபவர்கள் ஆவார்கள். இவர்களின் ஆயுதக்கிடங்கில் நேற்று திடீரென தீப்பிடித்தது. இந்தத் தீயில் அங்கு குவித்து வைக்கப்பட்டிருந்த ராக்கெட்டுகளில் சில வெடித்து நாலாபுறமும் பாய்ந்து சென்றன. இதில் 8 இடங்களில் உள்ள வீடுகள், கடைகள், கார்கள் சேதம் அடைந்தன. ஒரு மாவு மில்லிலும் தீப்பிடித்தது.
இந்த சம்பவங்களில் அப்பாவி பொதுமக்கள் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 10–க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply