ஐ.எஸ்.தீவிரவாதிகள் தயாரித்த ‘லேப்-டாப்’ வெடிகுண்டுகள் சோதனையில் கண்டுபிடிக்க முடியாது

அமெரிக்காவில் அல் கொய்தா தீவிரவாதிகள் விமானங்களை கடத்தி தாக்குதல் நடத்தியதற்கு பிறகு உலகம் முழுவதும் விமான பயணிகளை கடுமையான சோதனைக்கு உட்படுத்திய பிறகு அனுமதிக்கிறார்கள். அதையும் மீறி சோதனையில் கண்டுபிடிக்க முடியாத வெடிகுண்டுகளை நவீன முறையில் தயாரித்து தீவிரவாதிகள் வெடிக்க செய்து விடுகின்றனர்.

இவ்வாறு குளிர்பானத்தில் வெடிக்கும் திரவங்களை கலந்து வெடிக்க செய்த சம்பவம் ஏற்கனவே நடந்துள்ளது.

இப்போது நவீன லேப்- டாப்பில் வெடிகுண்டை ஐ.எஸ்.தீவிரவாதிகள் தயாரித்து இருப்பதாக அமெரிக்க உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.

விமானத்தில் பல பொருட்களை எடுத்து செல்ல தடை இருந்தாலும் லேப்-டாப், செல்போன் போன்ற எலக்ட்ரானிக் பொருட்களை எடுத்து செல்ல அனுமதிக்கப்படுகிறது.

இதனால் லேப்-டாப்பில் வெடிக்கும் வகையிலான குண்டுகளை பொருத்தி இருப்பதாக தெரிகிறது. லேப்-டாப்களை விமானத்தில் எடுத்து செல்லும் போது அவற்றை சோதனை செய்வதற்காக விசே‌ஷ கருவிகள் உள்ளன. அந்த கருவிகளாலும் கண்டுபிடிக்க முடியாத வகையில் இந்த வெடிகுண்டு லேப்- டாப்பை உருவாக்கி உள்ளனர்.

எனவே, அமெரிக்க உளவுதுறை அனைத்து விமான நிலையங்களுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஏற்கனவே அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட சில நாடுகள் ஆப்பிரிக்கா மற் றும் அரபு நாடுகள் சிலவற்றில் இருந்து வரும் பயணிகள் எலக்ட்ரானிக் சாதனங்களை எடுத்து வர தடை விதித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply