கொழும்பில் கட்டடங்களை அமைக்க புதிய நடைமுறை!

கொழும்பு உள்ளிட்ட மேல் மாகாணத்தில் நிர்மாணிக்கப்படும் புதிய கட்டடங்கள் தொடர்பில் புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்படவுள்ளது.

இனி வரும் காலங்களிலும் நிர்மாணிக்கப்படும் கட்டடங்களை மாநகர மற்றும் மாகாண அபிவிருத்தி அமைச்சு மற்றும் பொறியாளர்களின் முழுமையாக காண்காணிக்கவுள்ளனர்.

இதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாநகர மற்றும் மாகாண சபை அமைச்சின் பொறியியல் செயலாளர் நிஹால் ரூப்பசிங்க தெரிவித்துள்ளார்.

பொதுவாக சட்டத்திற்கமைய மாடி கட்டடங்கள் நிர்மாணிப்பதற்கு முன்னர், இலங்கை பொறியியல் நிறுவனத்தின் பொறியியலாளர் அனுமதிக்கமைய நிர்மாணிக்க வேண்டும்.

வெள்ளவத்தையில் இடிந்து விழுந்த கட்டடம் அவ்வாறான அனுமதிக்கமைய நிர்மாணிக்கப்பட்டதல்ல என செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இலங்கையில் மாடி கட்டடங்கள் நிர்மாணிப்பதற்கு பொறியலாளர் நிறுவனத்தில் அங்கத்துவம் கொண்ட பொறியியலாளரின் அனுமதி அவசியமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய அந்த பொறியியலாளர்கள் தொடர்பிலான தகவல்கள் கொழும்பு நகர சபையில் கோரப்பட்டுள்ளது.

அதற்கமைய தவறாக அனுமதி வழங்கியவர் இருந்தால் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இனி வரும் காலங்களில் இந்த நாட்டில் கட்டட பாதுகாப்பு நவீன பொறியியல் தொழில்நுட்பத்தில் கடைபிடிக்கப்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : TELOnews, இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply