பழைமை வாய்ந்த பாஹியன்கல மலைக்குகை சரியும் அபாயம்
கடல் மட்டத்திலிருந்து 1010 அடி உயரத்தில் அமைந்துள்ள பாஹியன்கல மலைக்குகை சரியும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளது.கடந்த வாரம் நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலையை அடுத்து, பல இடங்களில் வெள்ளம் மற்றும் மண்சரிவு ஏற்பட்டது. இந்நிலையில், பாஹியன்கல மலைக்குகைக்கு அடுத்துள்ள மலைப் பிரதேசங்களில் இடம்பெற்ற மண்சரிவுகளின் போது பல உயிர்ச்சேதங்கள் ஏற்பட்டதைத் தொடர்ந்து, இம்மலைக்குகையும் அண்மித்த மேட்டு நிலப்பகுதிகளும் மண்சரிவு ஆபத்தை எதிர்நோக்கியுள்ளமை தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து பாஹியன்கல மலைக்குகை பெளத்த விகாரையில் தங்கியிருந்த 30 பிக்குகள் உட்பட அருகாமையில் வசித்து வந்த 21 குடும்பங்களும் அவ்விடங்களிலிருந்து வேறு இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். மேலும் குறித்த வரலாற்று முக்கியத்துவம் மிக்க இந்தக் குகையை பாதுகாப்பது தொடர்பான ஆய்வுகளில் நிர்வாகதுறைசார் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
உலகின் மிகப்பழைமை வாய்ந்த எழும்புக்கூடு ஒன்றும் இந்தக் குகையில் இருந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply