நாடு முழுவதும் பாவிகள் தான் இருக்கக்கூடாது காவிகள் இருக்கலாம் : தமிழிசை செளந்தர்ராஜன்

நாடு முழுவதும் பாவிகள் தான் இருக்கக்கூடாது, காவிகள் இருக்கலாம் என பாஜக மாநில தலைவர் தமிழிசை செளந்தர்ராஜன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று காலை கோவை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,பாவிமயமாக தான் நாடு போகக்கூடாது, பாவிகளாக தான் நாடு இருக்கக்கூடாதே தவிர காவிகளாக இருந்தால் அது ஒரு ஆன்மிகம். மிக தவறான ஒரு கருத்தை முன்நிறுத்துகிறார்கள், எவ்வளவுதான் தவறான கருத்தை முன்நிறுத்தினாலும் கூட்டம் கூடி இவர்கள் குறள் எழுப்பினாலும் மத்திய அரசை எந்த விதத்திலும் இவர்களால் அசைக்கமுடியாது.

இந்தி எதிர்ப்பை காரணம் காட்டி ஒரு தலைமுறையை தவறாக வழிநடத்தியுள்ளனர். ஸ்டாலினும், ராகுலும் ஒன்றிணைந்து விமர்சித்தாலும் மத்திய அரசை ஒன்றும் செய்ய முடியாது. கலைஞரின் வைரவிழாவில் மோடியை விமர்சனம் செய்தது கண்டிக்கத்தக்கது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply