ஜனாதிபதி டிரம்புடன் மோடி இன்று பேச்சுவார்த்தை

ஜனாதிபதி டிரம்புடன் மோடி இன்று பேச்சுவார்த்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று அமெரிக்க நாட்டின் தலை நகர் வாஷிங்டனுக்கு ‘ஏர் இந்தியா-1’ விமானத்தில் போய்ச்சேர்ந்தார். வாஷிங்டன் ஆண்ட்ரூஸ் விமானப்படை தளத்தில் போய் சேர்ந்த போது, அமெரிக்காவுக்கான இந்திய தூதர் நவ்தேஜ் சர்னா மற்றும் அமெரிக்க அதிகாரிகள் அவருக்கு உற்சாகமான வரவேற்பு அளித்தனர். அவர்களுடன் பிரதமர் மோடி கைகுலுக்கி வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டார்.

இன்று (திங்கட்கிழமை) பிரதமர் மோடி, அமெரிக்க ஜனாதிபதியின் அதிகாரபூர்வ மாளிகையான வாஷிங்டன் வெள்ளை மாளிகைக்கு செல்கிறார். அங்கு அவரை ஜனாதிபதி டிரம்ப் வரவேற்கிறார்.

இந்த சந்திப்பின்போது பிரதமர் மோடிக்கு டிரம்ப் விருந்து அளித்து கவுரவிக்கிறார். அப்போது இந்தியா வருமாறு, ஜனாதிபதி டிரம்புக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுப்பார் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.

பிரதமர் மோடியும், டிரம்பும் கூட்டாக நிருபர்களை சந்திக்க மாட்டார்கள் என்றபோதிலும், இருவரும் தனித்தனியாக அறிக்கை வெளியிடுவார்கள் என தகவல்கள் கூறுகின்றன.

அமெரிக்காவில் 2 நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு அங்கிருந்து மோடி இன்று (திங்கட்கிழமை) நெதர்லாந்து நாட்டுக்கு செல்கிறார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply