மீண்டும் ஓர் ரான்சம்வேர் தாக்குதல்: ஐரோப்பிய அரசு அலுவலகங்கள், வங்கி சேவைகள் பாதிப்பு

உக்ரைன் நாட்டின் மின் துறை அலுவலகங்கள், வங்கிகள், விமான நிலையம் மற்றும் அரசு அலுவலக கணினிகளை புதிய ரான்சம்வேர் ஒன்று தாக்கியுள்ளது. அரசு நிறுவனங்கள் மட்டுமின்றி பல்வேறு தனியார் நிறுவனங்களும் புதிய ரான்சம்வேர் மூலம் பாதிக்கப்பட்டுள்ளது.ஹேக்கிங் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் யார் என்ற விவரம் இதுவரை அறியப்படவில்லை. புதிய ரான்சம்வேர் செர்நோபிள் அணு உலையையும் பாதித்துள்ளது என்றும் விமான நிலைய முணையம் மற்றும் ஏடிஎம் இயந்திரங்களும் ரான்சம்வேரின் இலக்காகியுள்ளன.

புதிய ரான்சம்வேர் சர்வதேச அளவில் ஏற்கனவே பரவியுள்ளது. டட்சு நிறுவனமான மெர்ஸ்க் புதிய ரான்சம்வேர் மூலம் பாதிக்கப்பட்டுள்ளது, இதேபோன்று பல்வேறு ரஷ்ய நிறுவனங்களையும் ரான்சம்வேர் விட்டுவைக்கவில்லை.

இந்த ரான்சம்வேர் பீடாரேப் எனும் வைரஸ் கொண்டுள்ளது என கேஸ்பர்ஸ்கை லேப் தெரிவித்துள்ளது. இதேபோன்ற வைரஸ் மார்ச் மாதம் கண்டறியப்பட்டது, மேலும் 61 ஆண்டிவைரஸ் மென்பொருள்கள் மட்டுமே இந்த வைரசை வெற்றிகரமாக கண்டறிந்துள்ளது என வைரஸ்டோட்டல் தெரிவித்துள்ளது.

இதேபோன்று இருவேறு நிறுவனங்கள் வெளியிட்டுள்ள தகவல்களில் புதிய ரான்சம்வேர் ஏற்கனவே பாதிப்பை ஏற்படுத்திய வானாகிரை வைரஸ்-ஐ பரவவிட்ட எக்ஸ்டெர்னல் ப்ளூ குழுவினர் தான் காரணம் என தெரிவித்துள்ளன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply