செயற்பாட்டு அரசியல் ரீதியாக தான் தோல்வி அடைந்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி : மஹிந்த

செயற்பாட்டு அரசியல் ரீதியாக தான் தோல்வி அடைந்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஏற்றுக்கொண்டுள்ளார் என கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது தோல்வியை சந்தித்திருந்த மஹிந்த, ஆட்சியை மீண்டும் கைப்பற்றும் நோக்கில் தீவிரமாக செயற்பட்டார். இதற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அதிகாரத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டிருந்தார்.

இணக்கப்பாட்டு தேசிய அரசாங்கம் நிறுவப்பட்டு இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையிலும், சுதந்திர கட்சியின் தலைவர் நானே என மஹிந்த பகிரங்கமாக தெரிவித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் முதன்முறையாக செயற்பாட்டு அரசியலில் தான் தோல்வியடைந்துள்ளதை மஹிந்த ஏற்றுக் கொண்டார்.

எதிர்வரும் தேர்தலில் ராஜபக்சர்களால் புதிதாக ஏற்படுத்தப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி கட்சியின் தாமரை மொட்டு சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக மஹிந்த அறிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 66வது ஆண்டு விழா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இடம்பெற்றது.

அதில் மஹிந்த ராஜபக்ச கலந்து கொள்ளாத நிலையில் அன்றைய தினம் அவர் வேறு கட்சியில் போட்டியிடவுள்ளதாக அறிவிப்பு விடுத்தார்.

அதில் மீண்டும் சுதந்திரக் கட்சியின் அதிகாரத்திற்காக முயற்சிக்கவில்லை என்பது உறுதியாகியுள்ள நிலையில் அவர் தனது தோல்வியை ஏற்றுக் கொண்டுள்ளதாக ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை, மஹிந்த ராஜபக்ச இன்னமும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் வழக்கு நீதிமன்றில் நிலுவையில் உள்ளது.இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பு எதிர்வரும் 29ஆம் திகதி அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply