பொன்சேகாவுக்கு எதிராகக் கூட்டு எதிர்க்கட்சி ஆர்ப்பாட்டம்
பிரதேச அபிவிருத்தி அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிற்கு எதிராக நாடு பூராகவும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை நடாத்தக் கூட்டு எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.முன்னாள் இராணுவ தளபதி ஜகத் ஜயசூரிய தொடர்பில் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா வெளியிட்டுள்ள கருத்துக்களுக்கு அதிருப்தியைத் தெரிவித்தும், அதற்கு எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையிலுமே குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகக் கூட்டு எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.
இதேவேளைக் குறித்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் தொடர்பிலான கூட்டு எதிர்க்கட்சியின் கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெறவுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply