இங்கிலாந்தில் தனக்கு தானே திருமணம் செய்த பெண் விவாகரத்து: காதலரை மணக்கிறார்

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் பிளிங்டன் பகுதியை சேர்ந்தவர் சோபியா(35). இவர் கடந்த வருடம் தன்னை தானே திருமணம் செய்து கொண்டார். உலகில் உள்ள எந்த ஒரு ஆண் மற்றும் பெண்ணை தனக்கு பிடிக்கவில்லை என்று இந்த முடிவை எடுத்தார்.இதற்காக நிஜ திருமணம் போன்று கோலாகலமாக அரங்கம் அமைத்து மணப்பெண் போன்று வெள்ளை நிற உடை அணிந்து தனக்கு தானே மோதிரம் மாற்றி கொண்டார். அதன்மூலம் அவர் ஒரே நாளில் ‘வைரல்’ ஆகி பிரபலம் ஆனார்.

தற்போது அவருக்கு இந்த திருமண வாழ்க்கை அவருக்கு பிடிக்கவில்லை. ‘எனக்கு என்னுடன் வாழ்வது கஷ்டமாக இருக்கிறது. அடிக்கடி சண்டை வருகிறது’ என தெரிவித்துள்ளார்.

எனவே ‘என்னை நானே விவாகரத்து செய்ய போகிறேன்’ என அறிவித்துள்ளார். அதற்கான ஏற்பாடுகளிலும் ஈடுபட்டுள்ளார். மேலும் இவர் ரவுரி பாராட் என்பவரை திருமணம் செய்ய போகிறார்.

சில வருடங்களுக்கு முன்பு இவர் தனக்குள்ளேயே காதலித்து தன்னை தானே திருமணம் செய்து கொண்டவர் ஆவார். இவரை காதலித்து வருவதாகவும் திருமணம் செய்து கொள்ள போவதாகவும் சோபியா அறிவித்துள்ளார். காதலில் விருப்பம் இல்லாத பலர் தனக்கு தானே திருமணம் செய்யும் முறையை ‘சோலோ தாழி’ என அழைக்கின்றனர், இந்த திருமணத்துக்கு இங்கிலாந்தில் அங்கீகாரம் இல்லை.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply