நான் நன்றாக இருக்கிறேன் வதந்திகளை நம்பாதீர்: பி.சுசீலா
‘நான் நலமாக இருக்கிறேன்; வதந்திகளை நம்ப வேண்டாம்’ என்று பாடகி பி.சுசீலா தெரிவித்திருக்கிறார்.சமூகவலைத்தளங்களில் பழம்பெரும் பாடகி பி.சுசீலாவைப் பற்றி வதந்திகள் பரவி வருகிறது. இதனால் அவருடைய ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியடைந்தார்கள்.தொடர் வதந்தியை அடுத்து அமெரிக்காவில் இருக்கும் பி.சுசீலா வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் பேசியிருப்பதாவது:-
வணக்கம் நேயர்களே, என்னைப் பற்றி நிறைய வதந்திகள் வருகின்றன. ஏனென்றால் நான் வெளிநாட்டுக்கு வந்திருக்கிறேன். நாளைக்கு நான் நம் நாட்டுக்கு திரும்பி வருகிறேன். வந்ததற்குப் பிறகு என்னை வந்து நீங்கள் பார்க்கலாம். ஏதேதோ சொல்கிறார்கள், அதை எல்லாம் நம்பாதீர். நான் நன்றாக இருக்கிறேன்.இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்.
பி.சுசீலா தொடர்பாக வதந்தி பரவி வருவது குறித்து பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் பி.சுசீலா அம்மா ரொம்ப சீரியஸாக இருக்கிறார் என்ற செய்தி பரவி வருகிறது. அரைமணி நேரத்திற்கு முன்பாக எனக்கு போன் செய்திருக்கிறார். அவர் அமெரிக்காவில் இருக்கிறார். அங்கிருந்து நாளைக்கு கிளம்பி, நாளை மறுநாள் இங்கு வருகிறார். ஏன் என்னைப் பற்றி தவறாக வதந்திகளைப் பரப்புகிறார்கள்? என்று என்னிடம் கேட்டார். இதற்கு என்ன காரணம் சொல்வதென்று தெரியவில்லை. சில பேருக்கு இதுவே வேலையாகி விட்டது. சங்கீத சரஸ்வதி பி.சுசீலா மிகவும் நலமாக இருக்கிறார்.
இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply