பௌத்த பிக்குகள் கடும்போக்குவாதிகளாக செயற்படுகிறார்கள்:சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க

சில பௌத்த பிக்குகள் கடும்போக்குவாதிகளைப் போன்று செயற்படுகின்றார்கள் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் கூறியுள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில், எமது நாட்டில் சில வங்குரோத்து அடைந்த அரசியல்வாதிகள் வேறும் எந்த வழியிலும் ஆட்சிக்கு வர முடியாது என்ற காரணத்தினால் இனவாதத்தையும், மதவாதத்தையும் தூண்டி, அரசியல் நடத்த முயற்சிக்கின்றனர்.

இவர்கள் பயன்படுத்தும் பிரதான ஆயுதம் கடும்போக்குவாதமாகும். நான் எல்லாவற்றையும் விட கவலையடைகின்றேன். நான் ஒரு நல்ல பௌத்தர், பௌத்த பிக்குகள் எனக் கூறிக்கொள்ளும் சிலர் காவியுடை அணிந்து கடும்போக்குவாத, மதவாத அரசியலை நாட்டில் பரப்பி நாட்டை தீயிட நினைக்கின்றார்கள்.

மறுபுறத்தில் நேர்மையான சரியான பௌத்த பிக்குகள் பலர் இருக்கின்றார்கள். இந்த விடயங்களை அவர்கள் எதிர்க்கின்றார்கள். எனினும், இந்த கடும்போக்குவாத பௌத்த பிக்குகள் பற்றியே ஊடகங்கள் பேசுகின்றன.

கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும் நாட்டில் இன்னமும் கடும்போக்குவாதம் பெரும்பான்மையானதாகவில்லை. கடும்போக்குவாதத்தை தூண்டும் சொற்ப அளவிலானவர்களுக்கு அஞ்சி நடுங்கி நாம் செய்ய வேண்டியதனை செய்யாமல் இருக்கக் கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply