வங்காளதேசத்தில் 30 இந்துக்கள் வீடுகள் தீவைப்பு: துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

வங்காள தேசத்தில் இந்துக்கள் மைனாரிட்டி ஆக உள்ளனர். அங்கு அவர்கள் மீதான தாக்குதல்கள் சமீப காலமாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.இந்த நிலையில் நேற்று ரங்பூர் மாவட்டம் தாகுர் புரா கிராமத்தில் இந்துக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. ‘பேஷ்புக்‘ சமூக வலைதளத்தில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவிட்டதாக கூறி ஒரு கும்பல் தாக்குதலில் ஈடுபட்டது.ரங்பூர் மாவட்டத்தில் உள்ள 7 கிராமங்களை சேர்ந்த 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கும்பலாக திரண்டு தாகுர்பரா கிராமத்தை நோக்கி சென்றனர். அங்கு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது ஏற்பட்ட வன்முறையின் போது இந்துக்களின் வீடுகளுக்கு தீவைத்தனர். அதில் 30 வீடுகள் எரிந்து சாம்பலாயின. பெரும்பாலான வீடுகள் சேதம் அடைந்தன.

இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. வன்முறை சம்பவங்களும் அதிகரித்தது. எனவே கும்பலை கலைக்க போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினார்கள்.

அதில் ஒருவர் பலியானார்,. 5 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இதற்கிடையே இச்சம்பவத்தை தொடர்ந்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்த 3 பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply