ஜெ. மகள் விவகாரம் ரத்த மாதிரி இல்லை என்கிறது அப்பல்லோ
தங்களது மருத்துவமனையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ரத்த மாதிரிகள் எதுவும் இல்லை என்று அப்பல்லோ நிர்வாகம் கைவிரித்துள்ளது. ஜெயலலிதாவின் மகளாக தம்மை அறிவிக்கக் கோரி பெங்களூரு அம்ருதா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ஜெயலலிதாவின் உடலை தோண்டி எடுத்து மரபணு சோதனை நடத்த வேண்டும் எனவும் அம்ருதா கோரிக்கை விடுத்திருந்தார்.
இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற போது ரத்த மாதிரிகளை சேகரித்து வைத்துள்ளீர்களா? என அப்பல்லோ நிர்வாகத்திடம் உயர்நீதிமன்றம் கேட்டிருந்தது. இதற்கு அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் இன்று பதில் அளித்துள்ளது. அதில், ஜெயலலிதா சிகிச்சை பெற்று ஓராண்டுக்கு மேலாகிவிட்டது. ஆகையால் ஜெயலலிதாவின் ரத்த மாதிரிகள் எதுவும் இல்லை என கைவிரித்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply