சில பிரேரணைகளை நான் தடுக்காதிருந்தால், அரச வங்கிகள் இன்று இல்லை : ஜனாதிபதி

அமைச்சரவைக்கு வந்த பல பிரேரணைகளை நான் தடுத்து நிறுத்தியுள்ளேன் எனவும், அந்தப் பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டிருந்தால் நாடு பாரிய பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்திருக்கும் எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

அமைச்சரவைக்கு ஒரு தடவை அரச வங்கிகளில் உள்ள நிதியை தனியார் வங்கிக்கு மாற்றும் ஒரு பிரேரணையைக் கொண்டுவந்தனர். நான் அதற்கு எதிராக நின்றேன். இதனை நிறைவேற்ற மூன்று மாதங்கள் அமைச்சரவையில் முயற்சித்தனர். நான் அதற்கு இடமளிக்கவில்லை.

அன்று அந்த பிரேரணை நிறைவேற்றப்பட்டிருந்தால், மக்கள் வங்கியும், இலங்கை வங்கியும், என்.எஸ்.பீ. வங்கியும் மூட வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

சமூக நீதிக்கான மக்கள் இயக்கத்தின் தலைவர் மறைந்த மாதுலுவாவே சோபித்த தேரரின் 76 பிறந்த தினத்தை முன்னிட்டு இலங்கை மன்றக் கல்லூரியின் இன்று (30) இடம்பெற்ற விசேட நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இதனைக் கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply