தேர்தல்கள் ஆணையாளர் – அரசியல் கட்சிகளின்பிரதிநிதிகள் சந்திப்பு
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய மற்றும் அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுக்கிடையிலான சந்திப்பு இன்று இடம்பெறவுள்ளது.குறித்த சந்திப்பில் எதிர்வரும் மாகாணச் சபைத் தேர்தல் தொடர்பில் ஆராயப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்துள்ளார்.
தேர்தல் சட்டத்தைத் திருத்த வேண்டுமா என்பது பற்றி தீர்மானம் எட்டுவது அவசியமாகும். எனவும் இரண்டு மாத காலத்திற்குள் இதுகுறித்து தீர்மானம் மேற்கொள்வது தொடர்பிலும் கவனம் செலுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இன்றைய கலந்துரையாடலில் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் செயலாளர்களும் கலந்துகொள்வார்கள். அடுத்த மாதம் ஆறாம் திகதி பாராளுமன்றத்தில் மாகாண சபைத் தேர்தல் தொடர்பான விசேட விவாதம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply