றெஜினாவின் கொலைக்கு உடன் தீர்வு கோரி சுழிபுரம் வீதியை மறித்து மாணவர்கள், பெற்றோர் ஆர்ப்பாட்டம்
யாழ்ப்பாணம் சுழிபுரத்தில் படுகொலை செய்யப்பட்ட சிறுமிக்கு நீதிகோரி, அந்தப் பகுதி மக்கள் மற்றும் மாணவர்கள் பிரதான வீதியை மறித்து இன்று (28) காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்துக்குப் தடை ஏற்பட்டுள்ளது.இன்று காலை மானிப்பாய் – பொன்னாலை வீதியை மறித்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.சுமார் 2 மணித்தியாலங்களுக்கு மேல் மக்கள் வீதியை மறித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.
பாடசாலை சென்ற சுழிபுரத்தைச் சேர்ந்த 6 வயதுடைய சிறுமி றெஜீனா, கொலை செய்யப்பட்டு கிணற்றிலிருந்து சடலமாக கடந்த 25ம் திகதி மாலை மீட்கப்பட்டார்.
அவரது கழுத்தில் கீறல் காயங்கள் இருந்தமையால் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் சந்தேக நபர்கள் அறுவரைக் கைது செய்தனர்.அவர்களில் பிரதான சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply