சிங்கப்பூர் உடன்படிக்கை: அத்துரலிய ரத்ன தேரர் சிவப்பு சமிக்ஞை

சிங்கப்பூர் உடன்படிக்கையை செயலிழக்கச் செய்வதற்குத் தேவையான அத்தனை நடவடிக்கையையும் முன்னெடுக்கப் போவதாக ஜாதிக ஹெல உறுமய கட்சியின் உயர் பீட உறுப்பினர் அத்துரலிய ரத்னதேரர் தெரிவித்தார்.சிங்கப்பூர் உடன்படிக்கைக்கு எதிராக தயாரிக்கப்பட்டுள்ள மகஜரில் கையொப்பமிட்டதன் பின்னர் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையில் தேரர் இதனைக் கூறினார். இந்த மகஜர் எதிர்வரும் 20 ஆம் திகதி ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளது.

இந்த உடன்படிக்கை கையொப்பமிடப்பட்டுள்ள விதம் நல்லாட்சி அரசாங்கத்தின் ஜனநாயக விரோதமான முறைமையை எடுத்துக் காட்டுகின்றது. இந்நாட்டின் அரச கரும மொழி ஆங்கிலம் இல்லை. இந்த உடன்படிக்கையை சிங்களம் அல்லது தமிழ் மொழியில் முன்வைப்பதற்காவது ஒரு பண்பாடான வழிமுறையொன்றை நல்லாட்சி அரசாங்கம் பின்பற்றவில்லை.

இந்த உடன்படிக்கையை அமைச்சர் மலிக் சமரவிக்ரமசிங்கவும், அவரைச் சுற்றியுள்ள சிலருமே செய்துள்ளனர். உண்மையைச் சொல்வதானால், ஜனாதிபதியோ, பிரதமரோ கூட இந்த உடன்படிக்கையின் ஆயிரம் பக்கங்களை வாசித்ததில்லை.

நாட்டின் வானம், தரை, கடல் ஆகிய பரப்புக்களைத் தாரைவார்க்கும் இந்த உடன்படிக்கையை செயலிழக்கச் செய்ய தேவையான அத்தனை நடவடிக்கையையும் முன்னெடுக்கப் போவதாகவும் தேரர் குறிப்பிட்டார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply