பலூனை தொட்டதற்காக அடித்துக்கொல்லப்பட்ட சிறுவன்
இந்தியாவின் உத்திரபிரதேச மாநிலத்தில் கோவில் நிகழ்ச்சியில் பலூனை தொட்டதற்காக 12 வயது சிறுவனை 5 சிறுவர்கள் கும்பலாக தாக்கி கொலை செய்துள்ள சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆக்ரா நகரின் அலிகாரிலுள்ள நட்ரோயி கிராமத்தில் ஜென்மாஷ்டமி திருவிழாவின் போது கோவிலுக்குள் அலங்காரத்திற்கு பலூன் வைக்கப்பட்டிருந்தது.
குறித்த பலூனை 12 வயது சிறுவன் ஆர்வ மிகுதியால் தொட்டுப்பார்த்துள்ளான். பலூனை தொட்ட அந்த சிறுவன் தலித் சமூகத்தை சேர்ந்தவன் என கூறப்படுகிறது.
இதனால் அங்கிருந்த 5 சிறுவர்கள் அந்த சிறுவனை கொலைவெறியுடன் அடித்து விரட்டியுள்ளனர்.
இதனை சுராஜ் என்ற சிறுவன் பார்த்துள்ளான். அதனை தொடர்ந்து இந்த தகவல் தாக்கப்பட்ட சிறுவனின் குடும்பத்தாருக்கு தெரியவர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
பொலிசாரிடம் சாட்சியம் அளித்த சுராஜ், இருவர் அவனுடைய கையையும் இருவர் காலையும் பிடித்துக்கொண்டனர் அதன் பின் ஒருவன் அவனது வயிற்றில் தாக்கியதாக கூறியுள்ளான்.
இதனிடையே தாக்கப்பட்ட சிறுவன் வீட்டிற்கு வந்தந்தும் தனக்கு வயிறு வலிப்பதாக பெற்றோரிடம் கூறியுள்ளான். இதனையடுத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிறுவன் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையிலேயே இறந்ததாக தெரியவந்துள்ளது.
இந்த விவகாரம் குறித்து பொலிசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உடற்கூறு ஆய்வுக்கு பின்னரே சிறுவன் இறந்ததற்கான காரணம் தெரியவரும் என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply