தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மகிந்த ராஜபக்சவை ஆதரித்திருந்தால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டிருக்காது:சுப்பிரமணியன் சுவாமி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தை கலைத்ததை சரியான நடவடிக்கை என குறிப்பிட்டுள்ள பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மகிந்த ராஜபக்சவை ஆதரித்தால் இந்த நிலையேற்பட்டிராது என தெரிவித்துள்ளார்.

கட்சி தாவுபவர்களை அடிப்படையாக கொண்ட பெரும்பான்மை என்பது அரசமைப்பிற்கு உகந்ததாகயிருந்தாலும் ஜனநாயகத்தில் தார்மீகம், வாக்காளர்களே தீர்மானிக்கவேண்டும் என தெரிவிக்கின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு மகிந்த ராஜபக்சவிற்கு ஆதரவளித்திருந்தால் அது சிறந்த விடயமாக அமைந்திருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.ஆனால் தமிழ் தலைவர்கள் தற்கொலை செய்யும் சுபாவத்தை உடையவர்கள் எனவும் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply