எல்லையில் மீண்டும் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் : இந்திய வீரர் உயிரிழப்பு
காஷ்மீர் எல்லையில், எல்லை கட்டுப்பாட்டு கோட்டுக்கு அப்பால் இருந்து பாகிஸ்தான் படையினர் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி அவ்வப்போது தாக்குதல் நடத்துகின்றனர். இந்திய நிலைகளை குறிவைத்து அவர்கள் தாக்கும்போது, இந்திய ராணுவமும் பதில் தாக்குதல் நடத்துகிறது.
அவ்வகையில், மீண்டும் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய பாகிஸ்தான் ராணுவம், சுந்தர்பானி செக்டார் கோவூர் பகுதியில் இன்று காலை துப்பாக்கி சூடு நடத்தியது. இந்த தாக்குதலில் இந்திய ராணுவம் தரப்பில் வருண் என்ற வீரர் உயிரிழந்தார்.
இதேபோல், நேற்று அக்னுர் பகுதியில் நடந்த தாக்குதலில் ஒரு வீரர் உயிரிழந்தார். பிப்மர் காலி பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் எல்லைப் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply