உழைக்கும் மக்களுக்கு நிவாரணங்கள் தேவையில்லை: கமல்ஹாசன்
உழைக்கும் மக்களுக்கு நிவாரணங்கள் அவசியமில்லையென மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.தர்மபுரியில் மக்கள் நீதி மய்யத்தின் கூட்டம் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே கமல்ஹாசன் இதனை கூறியுள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,
“மக்களாகிய உங்களை நம்பிதான் நான் அரசியலுக்கு வந்தேன். ஆகையால் நீங்கள் ஆதரவு அளித்தால் நிச்சயமாக தமிழகத்தில் நல்ல மாற்றத்தை கொண்டு வர முடியும்.
அந்தவகையில் முதலாவதாக நாட்டிலுள்ள ஏரி, குளங்களை பாதுகாக்க வேண்டியது நமது அனைவரது கடமையாகும். இதனால் குளங்களை பாதுகாக்கும் நடவடிக்கையில் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.
இதேவேளை உழைக்கும் மக்களின் பணத்தை அரசு சுரண்டி இலவசம் என்ற பெயரில் பலவற்றை உங்களுக்கு வழங்குகின்றது. ஆகையால் மக்களாகிய நீங்கள் இவற்றை புரிந்துகொண்டு செயற்பட வேண்டும்.
அந்தவகையில் பிச்சைக்காரர்களுக்கே நிவாரணங்கள் தேவை. உழைக்கும் மக்களுக்கு தேவையற்ற சலுகைகள் வேண்டியதில்லை” என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply