புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க ஞாயிறன்று சத்தியப்பிரமாணம்

புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (16) சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளதாக குருணாகல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார்.ரணில் விக்ரமசிங்க சத்தியப்பிரமாணம் செய்யும் நேரம் தொடர்பிலான தீர்மானம் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அவர் சகோதர தனியார் செய்தி ஊடகமொன்றிடம் கூறியுள்ளார்.

அத்துடன், புதிய அமைச்சரவை ஞாயிறு பிற்பகல் வேளையிலோ அல்லது திங்கள் அன்றோ சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளதாகவும் அசோக அபேசிங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.

நீதிமன்றத்தில் இடைக்காலத் தடை விதிக்கப்பட்டு தற்பொழுது பிரதமர் பதவியிலுள்ள மஹிந்த ராஜபக்ஷ இராஜினாமா செய்யும் வரையில் புதிய பிரதமரை ஜனாதிபதியினால் நியமிக்க முடியாதுள்ளது. மஹிந்த ராஜபக்ஷ நாளைய தினம் இராஜினாமா செய்யவுள்ளதாக அறிவித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷவின் இராஜினாமாவின் பின்னரேயே புதிய பிரதமரை ஜனாதிபதி நியமிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply