கொக்கேய்ன் போதைப் பொருளுடன் வௌிநாட்டுப் பிரஜைகள் இருவர் கைது

மேல் மாகாண வடக்கு பொலிஸ் குற்ற விசாரணைப் பிரிவு அதிகாரிகளால் 90 கிராம் கொக்கேய்ன் போதைப் பொருளுடன் இரண்டு வௌிநாட்டுப் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று மாலை கந்தானை புகையிரத நிலையத்திற்கு அருகில் நடத்திய சுற்றிவளைப்பில் 90 கிராமும் 90 மில்லி கிராம் கொக்கேய்ன் போதைப் பொருளுடன் இருவரும் கைதாகியுள்ளனர்.

அவற்றின் பெறுமதி சுமார் 25 இலட்சம் ரூபா என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இஸ்ரேல் மற்றும் இத்தாலி நாட்டுப் பிரஜைகளே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன், இருவரும் சுற்றுலா விசாவில் இலங்கை வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இருவரும் இன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply