கனடா மசூதியில் துப்பாக்கி சூடு நடத்திய வாலிபருக்கு ஆயுள் சிறை- 40 ஆண்டுகளுக்கு பரோல் கிடையாது

கனடாவின் கியூபெக் சிட்டியில் உள்ள மசூதியில் கடந்த 2017ம் ஆண்டு ஜனவரி 29-ம் தேதி மாலை தொழுகை நடைபெற்றபோது, ஒரு வாலிபர் துப்பாக்கியுடன் நுழைந்து, சரமாரியாக துப்பாக்கியால் சுட்டான். இதில், தொழுகையில் ஈடுபட்டிருந்த 6 பேர் உயிரிழந்தனர். 5 பேர் பலத்த காயமடைந்தனர்.
துப்பாக்கி சூடு நடத்திய வாலிபரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவன் அலெக்சாண்டர் பிசோனெட் என்பது தெரியவந்தது.
அவன் மீது கியூபெக் சிட்டி கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. விசாரணையின் முடிவில் அலெக்சாண்டர் பிசோனெட் (வயது 29) மீதான குற்றம் நிரூபணமானது. இதையடுத்து அவனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். அத்துடன் 40 ஆண்டுகள் வரை பரோல் பெற முடியாது என்றும் உத்தரவிட்டார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply