சட்ட விரோத மதுபானத்தை ஒழிக்க விசேட வேலைத்திட்டம் : ஜனாதிபதி

கிராமிய வறுமையை அதிகரிக்கின்ற சட்டவிரோத மதுபானத்தை முழுமையாக ஒழிக்கும் திட்டம் விரைவில் அமுலுக்கு வரும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தமது அதிகார எல்லைக்குள் சட்டவிரோத மதுபானங்கள் இருக்குமாயின் அப்பிரதேசத்திற்கு பொறுப்பான பொலிஸ் பொறுப்பதிகாரியும் (OIC) சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியும் (SSP) முழுமையாக பொறுப்பு கூறவேண்டும் என்ற புதிய சுற்றுநிரூபமொன்றை அடுத்தவாரம் வெளியிடப்பட உள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
கிராமிய வறுமையை அதிகரிப்பதற்கு முக்கிய காரணமாகவுள்ள சட்டவிரோத மதுபானத்தையும் முழுமையாக ஒழிப்பதற்குத் தேவையான நிகழ்ச்சித்திட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கூறியுள்ளார்.
பொலன்னறுவை மாவட்டத்திலுள்ள குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு உதவிகள் வழங்குவதற்காக நேற்று (09) பிற்பகல் பொலன்னறுவையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply