சவுதி இளவரசர் பாகிஸ்தானில் இரண்டு நாள் சுற்றுப்பயணம்- 5 டிரக்குகளில் கொண்டு வரப்பட்ட பொருட்கள்

சவுதி நாட்டின் இளவரசர் முகமது பின் சல்மான் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக இஸ்லாமாபாத்திற்கு வர இருக்கிறார். இந்த வார இறுதிக்குள் சவுதி இளவரசர் பாகிஸ்தான் செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

பாதுகாப்பு காரணங்களினால் தேதி இன்னும் உறுதி செய்யப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து 5 டிரக்குகளில் இளவரசரின் பயிற்சி சாதனங்கள், மரப்பொருட்கள், நாற்காலி  மற்றும் அவர் பயன்படுத்தும் பொருட்கள் பாகிஸ்தானுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த பொருட்கள் அனைத்தும் நேற்று இஸ்லாமாபாத்தை அடைந்தன. 

சவுதி இளவரசரின் பாதுகாப்பு குழுவினர் மற்றும் சவுதி பத்திரிக்கையாளர்களும் வந்துள்ளனர். பாகிஸ்தானுக்கு இளவரசராக வருகை தர உள்ளது இதுவே முதல் முறையாகும். முன்னதாக பாதுகாப்புத்துறை மந்திரியாக இருந்தபோது, ஏமன் உள்நாட்டுப் போர் தொடங்கிய காலத்தில் பாகிஸ்தானுக்கு வந்திருந்தார். 

சவுதி இளவரசரின் தற்போதைய சுற்றுப்பயணத்தின்போது, பிரதமர் இம்ரான் கான் மற்றும் ராணுவ அதிகாரிகளை சந்திக்க உள்ளார். இரு நாடுகளுக்கிடையே பல கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply