பிரெக்ஸிட் விவகாரம் – தெரசா மே கொண்டு வந்த தீர்மானம் 2வது முறையாக தோல்வி

ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து முறைப்படி விலகுவதற்கான ‘பிரெக்ஸிட்’ நடவடிக்கையை பிரதமர் தெரசா மே எடுத்து வருகிறார். இதையொட்டி ஐரோப்பிய கூட்டமைப்புடன் அவர் ஏற்படுத்திய ஒப்பந்தத்தை இங்கிலாந்து பாராளுமன்றம் நிராகரித்துவிட்டது. மேலும் ஒப்பந்தம் இல்லாமல் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறும் திட்டத்துக்கு முட்டுக்கட்டை போட்ட எம்.பி.க்கள் புதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்த தெரசா மேவை வலியுறுத்தினர்.

ஆனால் ஐரோப்பிய கூட்டமைப்போ புதிய ஒப்பந்தத்துக்கு வாய்ப்பு இல்லை என கூறிவிட்டது. ‘பிரெக்ஸிட்’ நடவடிக்கையின் காலக்கெடு அடுத்த மாதம் (மார்ச்) 29-ந் தேதி முடிவடைவதால், ஒப்பந்தம் இல்லாமல் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இந்த நிலையில் ஒப்பந்தம் இல்லா ‘பிரெக்ஸிட்’ தொடர்பாக அடுத்த மாதம் 12-ந் தேதி பாராளுமன்றத்தில் ஓட்டெடுப்பு நடத்தப்படும் என தெரசா மே தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று இங்கிலாந்து பாராளுமன்றத்தில் ‘பிரெக்ஸிட்’ விவாகரம் தொடர்பாக வாக்கெடுப்பு நடைபெற்றது. 

இதில் தெரசா மே கொண்டு வந்த தீர்மானத்தில் மீதான வாக்கெடுப்பு 149 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது.

இதன் மூலம் இங்கிலாந்து பாராளுமன்றத்தில் தெரசா மே கொண்டு வந்த தீர்மானம் 2வது முறையாக நிராகரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply