இனங்களுக்கிடையே ஐக்கியம் வலுப்படுத்தப்பட வேண்டும் : சபாநாயகர்

நாடு அபிவிருத்தி பாதையில் இட்டுச்செல்லப்பட வேண்டுமாயின் இனங்களுக்கிடையில் ஐக்கியம் முன்னெடுக்கப்படுவது அவசியம் என்று சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். முகத்துவாரத்தில் அமைக்கப்பட்டுள்ள முக்குலத்தோர் கலாச்சார மத்திய நிலையத்தை பொது மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு நேற்றைய தினம் இடம்பெற்றது. 100 மில்லியன் ரூபா செலவில் இந்த மத்திய நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய சபாநாயகர் ஜப்பான் 1948 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இருந்த நிலையை நாம் தற்பொழுது நோக்கும் பொழுது அந்த நாடு இன்று வேகமாக வளர்ச்சி அடைந்துள்ளது. தற்பொழுது நமது நாட்டிலும் இவ்வாறான அபிவிருத்தி இடம்பெறவேண்டும்.
நாம் கண் தானம் செய்யும் பொழுதும், இரத்த தானம் செய்யும் பொழுதும், சிறுநீரக தானம் செய்யும் பொழுதும் சிங்களவர் தமிழர் என்று பார்ப்பதில்லை. நாம் வரலாறு குறித்து பேசி காலத்தை கடத்துதல் பயனில்லை. நாம் இழந்தவற்றை எமது பிள்ளைகளுக்கும் எதிர்கால சமூகத்தினருக்கும் பெற்றுக்கொடுக்க வேண்டும். இவர்களுக்கு சிறப்பான எதிர்காலம் அமையவேண்டும் என்று தெரிவித்த அவர் இனங்களுக்கிடையே ஐக்கியத்தை ஏற்படுத்தல் இவ்வாறான மத்திய நிலையத்தின் மூலமும் மேற்கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் கலந்து கொண்ட எதிர்காட்சி தலைவர் மகிந்த ராஜபக்ஷ முக்குலத்தோர் அமைப்பினால் அமைக்கப்பட்டுள்ள இந்த மத்திய நிலையம் குறித்து நாம் பாராட்ட வேண்டும். விஷேடமாக பிரதேசத்தில் கலாச்சார நடவடிக்கைகளுக்கு இவ்வாறான மன்றம் ஒன்று பயன்மிக்கதாக அமையும் என்றும் அவர் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply