நவீன வசதிகளுடன் கூடிய இலங்கை இராணுவ தலைமையகம் இன்று திறப்பு

நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள இலங்கை இராணுவ தமையகம் இன்று (08) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் திறந்து வைக்கப்படவுள்ளது. தரைப்படை (இராணுவம்), கடற்படை மற்றும் விமான படை ஆகிய முப்படை பிரிவுகளின் தலைமையகங்களை ஒரே இடத்தில் அமைக்கும் நோக்கில் பெலவத்த அக்குரேங்கொட பகுதியில் இந்த கட்டம் அமைக்கப்பட்டுள்ளது.

77 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள அரச பாதுகாப்பு மற்றும் முப்படை தலைமையகத்திற்காக கடந்த 2011 ஆம் ஆண்டு மார்ச் 11 ஆம் திகதி அடிகல் நாட்டப்பட்டது.

இதற்காக 53.3 பில்லியன் ரூபா நிதி செலவிடப்பட்டுள்ளதுடன் அது இதுவரை இலங்கையில் அமைக்கப்பட்ட பாரிய கட்டட வேலைத்திட்டமாகவும் கருதப்படுகின்றது.

அதிநவீன தொழினுட்பங்களை பயன்படுத்தி அமைக்கப்பட்டுள்ள இந்த கட்டடத்தில் நவீன பாதுகாப்பு முறைமையும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

முப்படைகளின் தளபதி என்றவகையில் ஜனாதிபதியின் ஆலோசனையின் பேரில் அமைக்கப்பட்டுள்ள இந்த கட்டடத்தின் முப்படை தலைமையகம் மற்றும் காரியாலய பிரிவு ஆகியன இன்று ஜனாதிபதியால் திறந்து வைக்கப்படவுள்ளன.

இதற்கமைய நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள இராணுவ தலைமையகங்கள் அனைத்தும் ஒரே தலைமையகத்தின் கீழ் கொண்டு வரப்படவுள்ளது.

இதன்மூலம் இராணுவ தலைமையகத்தின் பல்வேறு பிரிவுகள் கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு பிரிவுகளில் அமைந்திருப்பதுடன், வாடகைக்கு பெறப்பட்டிருந்த கட்டிடங்களுக்காக மாதாந்தம் செலவிடப்பட்டுவந்த 50 மில்லியனுக்கும் அதிக தொகையை இதன் மூலம் மீதப்படுத்தக்கூடியதாக இருக்கும்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply