ஈரானில் பயங்கர நிலநடுக்கம் : 5 பேர் பலி

ஈரான் நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள அசெர்பைஜான் மாகாணத்தில் இன்று அதிகாலை 2.20 மணியளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் இருந்த வீடுகள் கட்டிடங்கள் குலுங்கின. சில கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளன. அப்பகுதி பொதுமக்கள் அனைவரும் வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் தஞ்சம் புகுந்தனர்.
பூமிக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.9 ஆக பதிவானது. நிலநடுக்கம் காரணமாக 5 பேர் உயிரிழந்தனர். மேலும் 120 பேர் காயமடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மீட்புப்படையினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
கடந்த 2003ம் ஆண்டு ஈரான் நாட்டின் பாம் நகரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 26,000 மக்கள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply