இன்புளூவன்ஸா வைரஸ் தொற்று வேகமாக பரவுவதற்கான ஆபத்துக்கள் காணப்படுவதாக எச்சரிக்கை

இன்புளூவன்ஸா வைரஸ் தொற்று வேகமாக பரவுவதற்கான ஆபத்துக்கள் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. IDH வைத்தியசாலையின் வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதன் காரணமாக பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.காய்ச்சல், உடல் வலி, சளி, இருமல் போன்றவைகளே இந்த நோயின் அறிகுறிகள் என வைத்தியர் தெரிவித்துள்ளார்.தும்மல் ஊடாக இந்த தொற்று மற்றவருக்கு பரவுவதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்புளூவன்ஸா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் அன்டிபயட்டிக் மருந்துகளை பெறுவதில் எந்த மாற்றமும் ஏற்படப் போவதில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply